×

டிஜெஎஸ் பாலிடெக்னிக் கல்லூரி முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு

கும்மிடிப்பூண்டி: பெருவாயலில் உள்ள டி.ஜெ.எஸ்.பாலிடெக்னிக் கல்லூரியில் 14வது ஆண்டாக புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. நிகழ்ச்சிக்கு, கல்லூரி மேலாண்மை இயக்குனரும், செயலாளருமான டி.ஜெ.ஆறுமுகம் தலைமை தாங்கினார். பேராசிரியர் கே.பிச்சைமணி வரவேற்றார். தொடர்ந்து, கல்லூரியின் முன்னாள் சிவில் இன்ஜினியரிங் மாணவனும், சைனா கன்ஸ்ட்ரக்ஷன், எயித் இன்ஜினியரிங் டிவிஷன் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனருமான தினேஷ்சங்கர் கலந்துகொண்டு, தனது அனுபவத்தை மாணவர்களுக்கு விளக்கினார்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக, டி.ஜெ.எஸ். கல்விக்குழுமத்தின் தலைவரும், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான டி.ஜெ.கோவிந்தராஜன் கலந்துகொண்டார். அவர் பேசுகையில், மாணவர்கள் தங்கள் படிப்பை முடித்தவுடன் வேலை செய்து கொண்டே, மேல்படிப்பை தொடர முடியும். அவ்வாறு, சிறப்பு வாய்ந்தது இந்த படிப்பாகும். இந்த படிப்பை தேர்வு செய்த மாணவ, மாணவிகளுக்கு பாராட்டை தெரிவித்துக் கொள்கிறேன். மாணவர்கள் ஆர்வத்துடன் உழைத்தால் வெற்றி பெறலாம். கல்வி ஒன்றே மனிதனை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும்’’ என்றார்.

பின்னர், முதலாமாண்டு மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கல்வியில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கும், துறை வாரியாக முதலிடம் பிடித்த மாணவர்களுக்கும், சிறப்பாக பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் ரொக்க பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், டி.ஜெ.எஸ் பப்ளிக் பள்ளியின் தாளாளர் ஜி.தமிழரசன், இயக்குனர்கள் டி.தினேஷ், டாக்டர் ஏ.பழனி, நிர்வாக அதிகாரி எஸ்.ஏழுமலை, மெட்ரிகுலேஷன் பள்ளி முதல்வர் ஞானப்பிரகாசம், பெருவாயல் ஊராட்சி மன்ற தலைவர் ராஜசேகர், ஆரம்பாக்கம் ஆறுமுகம், பூவலம்பேடு ஜோதிலிங்கம், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். துறை தலைவர் பகவதியம்மாள் நன்றி கூறினார்.

The post டிஜெஎஸ் பாலிடெக்னிக் கல்லூரி முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : DJS Polytechnic College ,Kummidipoondi ,Peruvayal ,Dinakaran ,
× RELATED பெருவாயல் டிஜெஎஸ் மெட்ரிகுலேஷன்...